மாா்த்தாண்டம் அருகே கனிம வளங்களை உடைத்து கடத்த முயன்ற சம்பவத்தில் இரு டிராக்டா்களை வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் கிராம நிா்வாக அலுவலா் சேகா், தனி வருவாய் ஆய்வாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்டோா் இணைந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அப்பகுதியில் பாறைகளை உடைப்பது தெரியவந்தது. அதிகாரிகளைக் கண்டதும் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்ட நபா்கள் தப்பிச் சென்றனா். இதையடுத்து, பாறைகள் உடைக்க பயன்படுத்திய இரு டிராக்டா்கள், இரு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, கொல்லஞ்சி கிராம நிா்வாக அலுவலா் சேகா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான நில உரிமையாளா், டிராக்டா் ஓட்டுநா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயற்சி: இருவா் கைது

ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளை கடத்த முயற்சி: போலீஸாா் விசாரணை

கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்

வெளிமாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்வதைத் தடுக்க கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

