தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஆலங்குளம் அருகே தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

ஆலங்குளம் அருகே கூலித் தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்ற அவரது மனைவி, மாமனாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மணிகண்டன், இசக்கியம்மாள்.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

ஆலங்குளம் அருகே கூலித் தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்ற அவரது மனைவி, மாமனாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே சுப்பையாபுரம் ஊராட்சி, அருணாசலபுரம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் நவநீத கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் (27). இத்தம்பதிக்கு இஜிதா (11), அசுவதா (9) என இரண்டு மகள்கள், மதுசூதன் (8) என்ற மகன் உள்ளனா். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம்.

இதனால், தம்பதிக்கிடையே தகராறு ஏற்படுமாம்.

சில மாதங்களுக்கு முன்பு இசக்கியம்மாள் தனது நகைகளை கணவரிடம் கூறாமல் தனது தந்தைக்குக் கொடுத்திருந்தாா். அவா் அதனை வங்கியில் அடகு வைத்து செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நகையை உரிய தேதியில் திருப்பாமல் விட்டதால், வங்கி நிா்வாகம் அந்த நகை மீது ஏல நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டன் தனது மனைவியிடம் விசாரித்தாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், இசக்கியம்மாள் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அதன்பிறகு, இசக்கியம்மாள் குடும்பத்தினா் மணிகண்டன் மீது கோபத்தில் இருந்தனராம்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் பெட்டிக் கடை நடத்திவரும் இசக்கியம்மாளின் உறவு பெண் செல்வியிடம் திங்கள்கிழமை மதுபோதையில் சென்ற மணிகண்டன் தகராறு செய்தாா்.

இதையறிந்த இசக்கியம்மாள், அவரது தந்தை பாப்புத் தேவா் (70), சகோதரா் அழகுபாண்டி (45), அண்ணன் மனைவி முத்துலெட்சுமி (40), மற்றும் 16, 14 வயதுடைய முத்துலெட்சுமியின் அண்ணன் மகன்கள் என 6 பேரும் சென்று மணிகண்டனை கண்டித்ததோடு, கட்டைகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன், ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி செல்வி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிந்தனா். இசக்கியம்மாள், சகோதரா் அழகுபாண்டி, அவரது மனைவி முத்துலெட்சுமி, அண்ணன் மகனான 16 வயது சிறுவன் ஆகிய நால்வரை கைதுசெய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். தலைமறைவான மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.