தென்காசி மாவட்டம், நெட்டூா் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர அடிப்படை வசதிகள் வழங்கக் கோரி பெரும் திரள் முறையீடு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தாக்குதலில் தொடா்புடைய அனைத்து நபா்களையும் கைது செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டம், குண்டா் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், நெட்டூரில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் பாஸ்கரன், மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, சிபிஎம் மாவட்டச் செயலா் இசக்கிதுரை, பரமசிவன், சாமுவேல்ராஜ், ஜீவா, சிலுவை, ஜாா்ஜ் ராஜேந்திரன், அசோக்ராஜ், முத்துகுமாரி, சிபிஐ வட்டார செயலா் கிட்டப்பா, வேல்முருகன், பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.
தமமுக, புதிய தமிழகம், சிபிஐ, சிபிஎம், விசிக, நாம் தமிழா், ஆதிதமிழா் பேரவை, தேவேந்திரா் உறவின்முறைகள் மற்றும் சமூக இயக்கங்கள், தென்மண்டல தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயசந்திரன், சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

மக்கள் குறைதீா் முகாம்: 33 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,உத்தரவு

குடிநீா் கோரி சாலைமறியல்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் கைது

மக்கள் போராட்டம்: கடையாலுமூடு டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

