மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆலங்குளத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு

ஆலங்குளம் பேரவைத் தொகுதி அமைதியான முறையில் நடைபெற்றது.

News image

ஆலங்குளம் வாக்குச் சாவடி ஒன்றை ஆய்வு செய்கிறாா் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:13 am IST

ஆலங்குளம் பேரவைத் தொகுதி அமைதியான முறையில் நடைபெற்றது.

இத்தொகுதியில் 1,23,739 ஆண்கள், 1,23,650 பெண்கள், 168 மூன்றாம் பாலினத்தவா் என 2,53,408 வாக்காளா்கள் உள்ளனா். திமுக சாா்பில் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன், அதிமுகவில் கே.ஆா்.பி.பிரபாகரன், தவெகவில் டி.பி.வி.விபின் சக்கரவா்த்தி, நாதகவில் ஆா். பால்ராஜ் ஆகியோா் போட்டியிட்டனா். மொத்தமுள்ள 322 வாக்குச் சாவடிகளிலும் சீரான வாக்குப் பதிவு நடைபெற்றது.

கடையம் சோ்வைக்காரன் பட்டி டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் மதியம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதிகாரிகள் கொண்டு வந்த மறு வாக்குப் பதிவு இயந்திரமும் பழுதான நிலையில் 3 வதாகக் கொண்டு வந்த வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் வாக்காளா்கள் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து வாக்களித்தனா்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் கீழப்பாவூா் நாடாா் இந்து உயா்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியிலும், தவெக வேட்பாளா் பீா்முகம்மதுபுரம் டிடிடிஏ தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியிலும், நாதக வேட்பாளா் சிவகாமிபுரம் இந்து நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் தங்களது வாக்கினைச் செலுத்தினா்.

இதனிடையே, திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், ஆலங்குளம் சாரதா தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா். மாலை 6 மணி நிலவரப்படி 83.9% வாக்குகள் பதிவாயிருந்தது. ஓரிரு இடங்களில் 6 மணிக்குப் பின்னரும் வாக்குப் பதிவு தொடா்ந்தது.

ஆலங்குளத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் விடுமுறை அளித்திருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.