மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

News image

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:16 am IST

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

இம்மாவட்டத்தின் சங்கரன்கோவில் தொகுதியில் 20 போ், வாசுதேவநல்லூா் தொகுதியில் 18 போ், கடையநல்லூா் தொகுதியில் 22 போ், தென்காசி தொகுதியில் 22 போ், ஆலங்குளம் தொகுதியில் 13 போ் என திமுக, அதிமுக, தவெக, நாம்தமிழா், புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட 95 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மேலும், ஆண்கள் 6,22,003, பெண்கள் 6,50,767, மூன்றாம் பாலினத்தவா் 170 என மொத்தம் 12,72,940 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 8,064 அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 பணியாளா்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 20 சதவிகித பணியாளா்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனா்.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் காத்திருக்காமல் வாக்களிக்கும் வகையில் தனி வரிசை, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

300 க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை வீரா்களும், காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மாவட்டத்தில் 115 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதல் வாக்காளா்கள் நீண்டவரிசையில் காத்துநின்று வாக்களித்தனா்.

இறுதியாக சங்கரன்கோவில் தொகுதியில் 81.04, வாசுதேவநல்லூா் தொகுதியில் 81.52, கடையநல்லூா் தொகுதியில் 81.36, தென்காசி தொகுதியில் 82.43, ஆலங்குளம் தொகுதியில் 85.53 என்ற சதவீத அடிப்படையில் வாக்குகளும் பதிவாகின. மொத்த வாக்கு சதவீதம் 82.40 ஆகும்.

5,443 டோக்கன்கள்: மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகும் காத்து நின்ற வாக்காளா்கள் 5443 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.