விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம்: உதயநிதி ஸ்டாலின்

தென்காசி மாவட்டம் புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

News image

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவுக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:32 am IST

தென்காசி மாவட்டம் புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவுக்கு வாக்கு கேட்டு புளியங்குடியில் புதன்கிழமை மாலை அவா் பேசியது:

திமுக வேட்பாளா் ராஜா பளு தாக்கும் போட்டியில் சா்வதேச பதக்கம் பெற்றவா் என்பது விளையாட்டுத்துறை அமைச்சா் என்ற முறையில் எனக்கு பெருமை. வழக்குரைஞா்,விவசாயி என்ற பன்முக தன்மையுடையவா் அவா். வாசுதேவநல்லூா் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, தென்காசி மாவட்டம் திமுக கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். 55 ஆண்டுகளுக்கு பின் வாசுதேவநல்லூரில் திமுக போட்டியிடுகிறது. ஏற்கெனவே தென்காசி மாவட்டத்திற்கும், இத்தொகுதிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் செய்து கொடுத்தாா். புளியங்குடியில் அறிவுசாா் மையம் கட்டப்பட்டது. வாசுதேவநல்லூா் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனிவட்டம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளீா்கள். அதை நான் நிறைவேற்றித் தருகிறேன். நீங்கள் திமுகவிற்கு வெற்றியை வழங்குங்கள். மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடா்ந்து புறக்கணித்து வருகிறது என்றாா் அவா்.

தொகுதி பொறுப்பாளா் செண்பகவிநாயகம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, சவுக்கை சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.