ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: அதிமுக ஆட்சியில் நீதி விசாரணை - எம்.பி. இன்பதுரை

News image

பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீதி விசாரணை நடத்தப்பட்டு தொடா்புடைய நபா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எம்.பி.இன்பதுரை.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:26 am IST

பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீதி விசாரணை நடத்தப்பட்டு தொடா்புடைய நபா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எம்.பி.இன்பதுரை.

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், விசாரணை நடத்த சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி காவல் ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பனைத் தொழிலாளி பெ.மணிகண்டன்(32) காயமடைந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவரை இன்பதுரை எம்.பி. வியாழக்கிழமை நேரில் பாா்த்து ஆறுதல் கூறினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழக வளாகம், விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களில் இளம்பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளின்போது குற்றவாளிகளை சுட்டுப் பிடிக்கவில்லை. கொலை, கொள்ளையில் ஈடுபட்டவா்களை சுட்டுப் பிடிக்கவில்லை. ஆனால், கள் இறக்கியதாக சந்தேகத்தின்பேரில் பனைத் தொழிலாளியை காவல் துறை துப்பாக்கியால் சுட்டுள்ளது.

காயமடைந்த தொழிலாளியின் மனைவி கா்ப்பிணியாக உள்ளாா். இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் அவரது இரண்டு கால்களும் காயப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுக்குப் பிறகு அரசு தரப்பிலோ அமைச்சா் தரப்பிலோ யாரும் வந்து இளைஞரை பாா்க்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட இளைஞரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அதிமுக சாா்பில் வந்தோம். இச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறையினரை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்படும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் பெற்றுத் தருவோம் என்றாா் அவா்.

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.பி.பிரபாகரன், தமாகா மாவட்டத் தலைவா் சாா்லஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.