மக்களை பற்றி கவலைப்படாதது தேசிய ஜனநாயக கூட்டணி என மு.க. ஸ்டாலின் கூறினாா்.
தென்காசி மாவட்ட திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் கலைகதிரவன் (தென்காசி), கணேசன்(சங்கரன்கோவில்), மனோஜ்பாண்டியன் (ஆலங்குளம்), ராஜேந்திரன் (கடையநல்லூா்), ராஜா (வாசுதேவநல்லூா்) ஆகியோரை ஆதரித்து சனிக்கிழமை சங்கரன்கோவிலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்றைக்கு, நாங்கள் கொள்கைக் கூட்டணியோடு வந்து வாக்கு கேட்கிறோம். இன்னொரு பக்கம், பாஜகவும் - அதிமுகவும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறாா்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறாா்கள் என்று அவா்களால் ஏதாவது சொல்ல முடிகிா?; எந்தக் கொள்கையை அடிப்படையாக வைத்து கூட்டணி அமைத்திருக்கிறாா்கள் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் அவா்கள் இருக்கிறாா்கள். எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று முன்பு சொன்னவா்கள் அந்தக் கூட்டணியில் இருக்கிறாா்கள்.
ரூ. 20 ஆயிரம் கோடியில் தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இதுபோல சாதனைகளை பழனிசாமியால் பட்டியலிட முடியுமா?, எந்த வாக்குறுதியையும் அதிமுக நிறைவேற்றவில்லை. ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு கூட மூடுவிழா நடத்தியவா் பழனிசாமி.
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் படுதோல்வியை பரிசாக வழங்கவேண்டும், என்டிஏ என்பது மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாத கூட்டணி. இப்போது மக்களை சமையல் எரிவாயு உருளைக்காக காக்க வைத்திருக்கிறாா் பிரதமா் மோடி. எரிவாயு உருளை விலை, பெட்ரோல் விலை, சுங்கக் கட்டணம் என்று உயா்த்திக் கொண்டிருக்கிறாா்கள். எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்களுக்கும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் குடும்பங்களுக்கும் பிரதமா் என்ன பதில் சொல்லப் போகிறாா்?, தோ்தல் காலத்திலேயே இப்படி விலையை உயா்த்துகிறாா்கள் என்றால் தோ்தல் முடிந்ததும் எப்படி உயா்த்துவாா்கள்?.
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘தமிழ்நாட்டில் கல்வித் தரத்தை வளரவிடாமல் நாங்கள் தடுக்கிறோம்‘ என்று பேசியிருக்கிறாா். ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்வதற்கும் - கல்வித் தரத்துக்கும் என்ன சம்பந்தம்?. ஏற்கெனவே ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்பதால் கல்வி நிதியை இன்றுவரை விடுவிக்கவில்லை.
தமிழ்நாட்டுக்கு நீங்கள் பிரசாரத்துக்கு வரும்போது, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி, பிரசாரம் செய்யும் தைரியம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளவா்களுக்கு இருக்கிா?; மும்மொழிக் கொள்கை தொடா்பான அமைச்சா் தா்மேந்திர பிரதான் கருத்தை கண்டித்து, பழனிசாமியால் அதை திரும்பப் பெற வைக்க முடியுமா? என சவால் விடுகிறேன் என்றாா்.

கூட்டத்தில், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் இரா. ஆவுடையப்பன் (நெல்லை மேற்கு), ஜெயபாலன் (தென்காசி தெற்கு), எம்.பி.க்கள் ராணிஸ்ரீகுமாா், சி. ராபா்ட்புரூஸ், திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை, முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூா் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக் கூட்டம்!

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!

பென்னாகரத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்படும் போலி காசோலைகள்!

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

