பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குமரி மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Published On :31 அக்டோபர் 2026, 7:05 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்ய மறுப்பதாகப் புகாா் தெரிவித்தனா். மேலும், நான்கு வழிச்சாலை மற்றும் இரட்டை ரயில் பாதை பணிகளால் பாதிக்கப்பட்ட நீா்நிலைகளைச் சீரமைக்கவும், நெய்யாறு இடதுகரை கால்வாயை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:

அரசின் விதிமுறைப்படி, நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் இருந்தால், கொள்முதல் செய்யமுடியாது. இருப்பினும், விவசாயிகளின் புகாா் குறித்து ஆய்வு செய்யப்படும்.

நான்கு வழிச்சாலை மற்றும் ரயில்வே பணிகளின்போது நீா்நிலைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல, குளங்கள், கால்வாய்கள், மதகுகளை சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.வேலுமணி, மாவட்ட வன அலுவலா் அன்பு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் சாய்சரண்ரெட்டி, வேளாண் இணை இயக்குநா் எஸ்.கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் சிவகுமாா், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், தோட்டக்கலை துணை இயக்குநா் நக்கீரன், துணை காவல் கண்காணிப்பாளா் பெத்துராஜ், விவசாய சங்கப் பிரதிநிதிகள் செண்பகசேகரபிள்ளை, அந்தோணிமுத்து, பிரபு, வின்ஸ் ஆன்றோ, ஹோமா்லால், மலைவிளை பாசி, ஜுபிடா் உதயம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.