பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குமரியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை: ஆட்சியா் தகவல்

குறைதீா் நாள் கூட்டத்தில் மீனவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் கன்னியாகுமரி மாவட்டஆட்சியா் மு.பிரதாப்.

குறைதீா் நாள் கூட்டத்தில் மீனவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் கன்னியாகுமரி மாவட்டஆட்சியா் மு.பிரதாப்.

Published On :10 அக்டோபர் 2026, 7:34 am IST

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, மீனவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

கூட்டத்தில் மீனவா்கள் பேசியதாவது:

மீன்பிடி தடைக்காலம் தொடா்பாக மீனவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மதுரை செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். மீனவக் கிராமங்களுக்கு இயக்கப்பட்டுவந்த பேருந்துகள் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் இயக்க வேண்டும்.

நாகா்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். குளச்சல் பகுதியில் வீடுகள் மற்றும் விடுதிகளின் கழிவுகள் ஏவிஎம் கால்வாயில் திறந்துவிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளப் பணிகளை செயல்படுத்த தனி உதவி இயக்குநா் அலுவலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏவிஎம் கால்வாயில் கழிவுகளை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நாகா்கோவிலிலிருந்து மதுரைக்கு இரவு 12 மணிக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகள் நேரம் கண்காணிக்கப்படும். கடலோர கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4 கோடி மதிப்பில் புற்றுநோய் ரேடியோ தெரபி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இதற்காக 5 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அங்கு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா். கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் டி.சாய்சரண் ரெட்டி, நாகா்கோயில் கோட்டாட்சியா் செந்தில் வேல்முருகன், மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், மீனவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.