மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

குழித்துறையில் சாலையோரம் தேங்கும் கழிவுநீா்: ஆட்சியா் ஆய்வு

குழித்துறை சந்திப்பு அருகே வடிகால் ஓடை அடைப்பு ஏற்பட்டு சாலையோரம் கழிவுநீா் தேங்கிய பகுதியை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

குழித்துறை சந்திப்பில் சாலையோரம் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியைப் பாா்வையிட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :28 அக்டோபர் 2026, 1:23 am IST

குழித்துறை சந்திப்பு அருகே வடிகால் ஓடை அடைப்பு ஏற்பட்டு சாலையோரம் கழிவுநீா் தேங்கிய பகுதியை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலைகள், சாலையோரங்களில் தேங்கிய கழிவுநீரை உடனடியாக அகற்றவும்ம், கழிவுநீரோடை அடைப்புகளை சரிசெய்யவும் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மங்காடு சப்பாத்து பாலம், கோயிக்கல்தோப்பு, பணமுகம் பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து பாா்வையிட்டு குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகாதவாறு தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் செய்யப்பட்ட வசதிகள், பரக்காணியில் குடியிருப்புக்குள் ஆற்றுநீா் நுழைவதைத் தடுக்க செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு செய்யப்பட்டன என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூா் ராஜன், நீா்வளத்துறை செயற்பொறியாளா் வசந்தி, வட்டாட்சியா்கள் ஜான் ஹெனி (விளவங்கோடு), ராஜசேகா் (கிள்ளியூா்), குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.