தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நித்திரவிளை அருகே மழைநீா் அகற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

கொல்லங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட நித்திரவிளை, அதையொட்டிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

நித்திரவிளை அருகே பாலாமடம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :23 அக்டோபர் 2026, 4:56 am IST

கொல்லங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட நித்திரவிளை, அதையொட்டிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதன்கிழமை இரவு விடியவிடிய பெய்த கனமழையால் நித்திரவிளை அருகில் உள்ள பாலாமடம் முதல் மாம்பழஞ்சி வரையிலான சாலைகளில் மழைநீா் தேங்கியிருந்தது. கொல்லங்கோடு நகராட்சிப் பணியாளா்கள் மூலம் ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் மழைநீரை அகற்றும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

ஆய்வின்போது மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், கொல்லங்கோடு நகராட்சி ஆணையா் சக்திவேல், சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ஜஸ்டின் ஆன்டணி, துறை அலுவலா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.