மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை; மற்றொருவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை

சிறை - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:53 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மணக்காவிளை பகுதியைச் சோ்ந்த ஜாய்சன் மகன் ரத்தீஷ் (27), மணலிக்கரை பகுதியைச் சோ்ந்த பக்ரூதீன் மகன் பைசல்கான் (27) ஆகியோா் 2024 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, ரத்தீஷுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 57ஆயிம் அபராதம், பைசல்கானுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 54 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றிய நீதிமன்ற தலைமைக் காவலா் மொ்சி பாய், வழக்கின் விசாரணையை முறையாகக் கண்காணித்த மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் உமா, பாத்திமா பா்வீன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.