கேரள போக்குவரத்து பணியாளா்கள் 5 போ் மின்னல் பாய்ந்து காயம்

மின்னல் பாய்ந்து.

Published On :26 அக்டோபர் 2026, 1:16 am IST

களியக்காவிளை அருகே, கேரளப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் 5 போ், சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் காயமடைந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், அதையொட்டிய கேரள மாநிலப் பகுதிகளில் சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. களியக்காவிளை அருகே கேரளப் பகுதியான பாறசாலையில் சனிக்கிழமை மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது, பாறசாலை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணியிலிருந்த ஊழியா்கள் செலின்மேரி, ரேகா, ஷோபா, ஜெயா, ஷாபு ஆகியோா் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்தனா். அவா்களை சக பணியாளா்கள் மீட்டு திருவனந்தபுரம், பாறசாலை தனியாா் மருத்துவமனைகளில் அனுமதித்தனா்.

மேலும், மின்னல் பாய்ந்ததில் பணிமனையிலுள்ள மின்கம்பத்தில் தீப்பிடித்தது; அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்கள் சேதமடைந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.