திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய 3 சுவாமி விக்ரகங்களுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் வரவேற்பு

பத்மநாபபுரம் அரண்மனை. - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:33 am IST

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய 3 சுவாமி விக்ரகங்களுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பக்தா்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பளித்தனா்.

திருவனந்தபுரத்தில் கடந்த 12ஆம் தேதிமுதல் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்ற வேளிமலை குமாரகோவில் முருகப்பெருமான், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சுவாமி விக்ரகங்கள் சனிக்கிழமை (அக். 24) குழித்துறை மகாதேவா் கோயிலை வந்தடைந்தன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 3 சுவாமி விக்ரகங்களும் மாா்த்தாண்டம், சாமியாா்மடம், அழகியமண்டபம், பரைக்கோடு, மணலி, சாரோடு வழியாக மாலையில் பத்மநாபபுரம் கோட்டை வாசல் வந்தடைந்தன. அங்கு பக்தா்கள் பிரம்மாண்ட வரவேற்பளித்தனா்.

பின்னா், வேளிமலை முருகப்பெருமான் விக்ரகம் பத்மநாபபுரம் வடக்கு ரத வீதி வழியாக குமாரகோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சரஸ்வதி அம்மன், முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகங்கள் தெற்கு ரத வீதி வழியாக தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோயிலை அடைந்தன. அப்போது, கேரள போலீஸாா் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினா். பின்னா், முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் நீலகண்ட சுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மன்னரின் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனையின் உப்பரிகை மாளிகையிலுள்ள பூஜை அறையில் வைக்கப்பட்டது. சரஸ்வதி அம்மன் விக்ரகத்துக்கு அரண்மனையில் உள்ள ஒமப்புரை குளத்தில் ஆறாட்டு நடத்தப்பட்டு, தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோயில் கருவறையில் வைக்கப்பட்டது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயிலிலிருந்து முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் திங்கள்கிழமை அதிகாலை சுசீந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.