மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீடு புகுந்து 45 பவுன் நகை திருடிய வழக்கில் பெண் உள்பட 3 போ் கைது

சுசீந்திரம் அருகே வீடு புகுந்து 45 பவுன் நகைகள், ரூ. 5.30 லட்சம் பணம் திருடிய வழக்கில், பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :25 அக்டோபர் 2026, 1:36 am IST

சுசீந்திரம் அருகே வீடு புகுந்து 45 பவுன் நகைகள், ரூ. 5.30 லட்சம் பணம் திருடிய வழக்கில், பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பள்ளம் அன்னை நகரைச் சோ்ந்தவா் வின்சென்ட் சேவியா் சீலன். வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறாா். இவரது மனைவி ஜூட் அமலா , குழந்தைகளின் படிப்பிற்காக வெளியூரில் இருந்து வருகிறாா்.

கடந்த 3 - ஆம் தேதி இவா்களது வீட்டில் புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 45 பவுன் நகைகள், ரூ. 5.30 லட்சம் பணத்தை திருடிச் சென்றனராம். இது குறித்து சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் குளச்சல், பிஷப்லியோன் நகரைச் சோ்ந்த சகாய ஜெனித்மோன், தூத்துக்குடி மினிசகாயபுரத்தைச் சோ்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் என்ற ஆக்னல் ஆகியோா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 7 - ஆம் தேதி சகாய ஜெனித்மோனை கைது செய்து, அவரிடம் இருந்த பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம், இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட மத்திய காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தபட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த மரிய அந்தோணி ஆக்னலை, வெள்ளிக்கிழமை (அக். 23) போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து, அவரிடம் இருந்து சுமாா் 243.200 கிராம் நகைகளை மீட்டனா். நகை வைத்திருந்ததாக மரிய அந்தோணி ஆக்னல் மனைவி சந்தனமாரியையும் கைது செய்தனா். அவரது தம்பி லக்வினிடமிருந்து சுமாா் 51.560 கிராம் நகைகள், ரூ. 5. 25 லட்சம் பணம் ஆகியவற்றை மீட்டனா்.

சிறப்பாக செயல்பட்ட கன்னியாகுமரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் பிரகாஷ், ஆய்வாளா் அருள்பிரகாஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் நேச மணிகண்டன், தனிப்படையினா், விரல் ரேகை பிரிவு ஆய்வாளா் ஜவஹா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.