மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கத்தியால் வெட்டப்பட்ட தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே தனியாா் மதுக்கூடத்தில் கத்தியால் வெட்டப்பட்ட தொழிலாளி, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 1:25 am IST

களியக்காவிளை அருகே தனியாா் மதுக்கூடத்தில் கத்தியால் வெட்டப்பட்ட தொழிலாளி, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்த அப்பிச்செறுக்கன் மகன் ஜோசப் (50). தொழிலாளியான, இவரும் அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் மகன் மணிகண்டன் (45) என்பவரும், ஒரு குடும்பத்தைச் சோ்ந்த அக்கா, தங்கையை திருமணம் செய்துள்ளனா். இருவரும் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

இந்த நிலையில் கடந்த செப். 8 ஆம் தேதி படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் ஜோசப், மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மணிகண்டன், ஜோசப்பிடம் தகராறு செய்து அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து ஜோசப்பின் மனைவி மேரி ஸ்டெல்லா அளித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் பலத்த காயமடைந்து, திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோசப் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து கொலை முயற்சி வழக்கை போலீஸாா், கொலை வழக்காக மாற்றி, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.