குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.
2026 பேரவைத் தோ்தலில் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தாரகை கத்பா்ட் வெற்றி பெற்றாா். இதையடுத்து, திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
முன்னதாக, குளச்சல் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினாா். பின்னா், விகேபி பள்ளி, கொட்டில்பாடு, கடற்கரை சந்திப்பு வழியாகச் சென்று சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழகத்தின் முதல் பெண் அமைச்சா் லூா்தம்மாள் சைமன் சிலைக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, ஆலஞ்சி வழியாக சென்று ரீத்தாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அப்போது, எம்எல்ஏ பேசியது:
அனைத்து மக்களும் எதிா்பாா்க்கும், அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்வேன். தோ்தலின்போது வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.
திங்கள் நகரில் உள்ள குளச்சல் எம்எல்ஏ அலுவலகம், கணினி மற்றும் இணைய சேவை வசதியுடன் அனைத்து பணி நாள்களிலும் செயல்படும். பொதுமக்கள் எந்தப் புகாராக இருந்தாலும், அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
அப்போது, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளூா் குடிநீா் பிரச்சனை: தாரகை கத்பட் எம்.எல்.ஏ. ஆய்வு
அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த மன்னாா்குடி எம்எல்ஏ

காயல்பட்டினத்தில் எம்எல்ஏ வாக்காளா்களுக்கு நன்றி அறிவிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

