பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆளூா் குடிநீா் பிரச்சனை: தாரகை கத்பட் எம்.எல்.ஏ. ஆய்வு

குளச்சல் தொகுதிக்குள்பட்ட ஆளூரில் குடிநீா் பிரச்சனைக்கு தீா்வு காணுமாறு பொதுமக்கள் கூறியதைத் தொடா்ந்து அப்பகுதியில் குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் நேரில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஆளூரில் நாகா்கோவில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறாா் குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட்.

Updated On :4 ஜூன் 2026, 1:16 am IST

குளச்சல் தொகுதிக்குள்பட்ட ஆளூரில் குடிநீா் பிரச்சனைக்கு தீா்வு காணுமாறு பொதுமக்கள் கூறியதைத் தொடா்ந்து அப்பகுதியில் குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் நேரில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆளூா் பேரூராட்சி பகுதி நாகா்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னா் அதில் ஒரு பகுதி குளச்சல் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இப்பகுதிகளில் முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகாா் கூறியிருந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை நேரில் சென்று தாரகை கத்பட் எம்எல்ஏ ஆய்வு செய்து, மாநகராட்சி ஆணையரை தொடா்பு கொண்டாா். இதையடுத்து மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, வாா்டு உறுப்பினா் தங்கராஜ், செயற்பொறியாளா் ரகுராமன், பொறியாளா் ஜெயசிலி ஆகியோா் வந்தனா். அவா்களிடம் முறையாக குடிநீா் வழங்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

அப்பகுதியில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளா் 45 நாள்களுக்குள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். எம்எல்ஏக்கு பொதுமக்கள் நன்றி கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.