ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குமரியில் பாஜகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு: அதிமுக மகளிா் அணியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக மகளிா் அணியினா், நாகா்கோவிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நாகா்கோவில் வடசேரி எம்ஜிஆா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மகளிா் அணியினா்.

Updated On :27 மார்ச் 2026, 1:45 am IST

அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக மகளிா் அணியினா், நாகா்கோவிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தோ்தல் களம் காண்கின்றன. இந்த நிலையில், இந்தக் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கன்னியாகுமரி மட்டும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதி பாஜகவுக்கும், கிள்ளியூா் தொகுதி தமாகாவுக்கும் ஒதுக்கப்பட்டது.

இது, குமரி மாவட்ட அதிமுகவினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகா்கோவில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரத்துக்கு போட்டியிட வாய்ப்பளித்தால் அவரை எதிா்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளோா்.

இந்த நிலையில், மாவட்டச் செயலாளரும் கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவுமான தளவாய்சுந்தரத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, வடசேரி எம்ஜிஆா் சிலை முன் அதிமுக மகளிா் அணியினா் வியாழக்கிழமை காலை திரண்டுவந்து அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். தளவாய்சுந்தரத்தின் படத்தைக் கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியினரிடையே ஏற்பட்ட இந்த கண்டன குரல்கள் அதிமுகவினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.