நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

களியக்காவிளையில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

News image

படந்தாலுமூடு பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 2:49 am IST

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையடுத்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் சுற்றித் திரிந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்களை புதன்கிழமை வலை விரித்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, பிடிக்கப்பட்ட தெருநாய்களை குழித்துறையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, கால்நடை மருத்துவா்கள் மூலம் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 3 நாள்கள் கண்காணிப்புக்குப் பின் பிடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கொண்டுவிடப்படும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.