தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா், கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், தொடா்ந்து பாத்திமாபுரம், கச்சேரிநடை, புன்னமூட்டுக்கடை, கண்ணநாகம், திருமன்னம், நீரோடி, மாா்த்தாண்டன்துறை, வள்ளவிளை, ததேயுபுரம், மேடவிளாகம், இளம்பாலமுக்கு, நம்பாளி, கிராத்தூா், சமத்துவபுரம், கலிங்கராஜபுரம், காஞ்சாம்புறம் வழியாக நித்திரவிளை ஆகிய பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், கிள்ளியூா் தொகுதி மக்களுக்கு பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறேன். மக்களின் வளா்ச்சிக்கு பணியாற்றிட மீண்டும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றாா்.
இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். கொல்லங்கோடு நகரத் தலைவா் பால்ராஜ், மாநிலச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், மாவட்ட துணைத் தலைவா் கோபன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்க நடவடிக்கை: அமைச்சா் ராஜேஷ்குமாா்
அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன் நன்றி தெரிவிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

