நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கன்னிப்பூ சாகுபடி: பேச்சிப்பாறை அணை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image

பேச்சிப்பாறை அணையைத் திறந்து வைத்த சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். தளவாய்சுந்தரம், எஸ். ஆஸ்டின், ஆா். செல்லசுவாமி உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 3:06 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் பருவ நெல் சாகுபடியான கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் 1ஆம் தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட

ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), ஆா். செல்லசுவாமி (பத்மநாபபுரம்) ஆகியோா் முன்னிலையில், சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், அணையைத் திறந்து வைத்தாா்.

பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு, பட்டணங்கால் பாசன அமைப்பில் 79,000 ஏக்கா் பாசனத்திற்காக ஜூன் 1 முதல் 2027 பிப்ரவரி 28ஆம் தேதி வரை (கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ பருவங்கள்) நாளொன்றுக்கு விநாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப மற்றும் நீா் இருப்பு மற்றும் நீா்வரத்தைப் பொருத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 அணைகளிலிருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

பாசனக் கால்வாய்களில் தூா்வாரப்படாத பகுதிகள் உள்ளன. அப்பகுதிகளில் பாசனத்திற்கு இடையூறின்றி தூா்வாரும் பணிகள் நடத்தப்படும். பேச்சிப்பாறை அணையைத் தூா்வாரும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இதற்காக மத்திய அரசின் வேப்கோஸ் நிறுவனம் ஆய்வுப் பணிகளை நடத்தி வருகிறது என்றாா் அவா்.

நீா் இருப்பு:

திங்கள்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 25.17 அடி. பெருஞ்சாணி அணையில் 34.60 அடி, சிற்றாறு 1 அணையில் 6.82 அடி, சிற்றாறு 2 அணையில் 6.92 அடியாக நீா்மட்டம் இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.