விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேதமடைந்த அரசு நினைவுத் தூணை புதுப்பொலிவுற செய்ய கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக - கேரள மாநில எல்லையோரம் கம்பீரமாக காட்சியளித்த தமிழக அரசின் நினைவுத் தூண் சேதமடைந்து பல ஆண்டுகளை கடந்தும் சீரமைக்கப்படாமல், கேட்பாரற்ற நிலையில் காணப்படுகிறது. இதை புதுப்பொலிவுற செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்து உள்ளனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 10:38 pm IST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக - கேரள மாநில எல்லையோரம் கம்பீரமாக காட்சியளித்த தமிழக அரசின் நினைவுத் தூண் சேதமடைந்து பல ஆண்டுகளை கடந்தும் சீரமைக்கப்படாமல், கேட்பாரற்ற நிலையில் காணப்படுகிறது. இதை புதுப்பொலிவுற செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்து உள்ளனா்.

களியக்காவிளையில் தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு பகுதியில் 15 அடி உயரம் கொண்ட தமிழக அரசு சின்னம் பொருத்தப்பட்ட நினைவுத் தூணும், மற்றொரு பகுதியில் நான்கு சிங்கங்களின் உருவம் பொறிக்கப்பட்ட 15 அடி உயரம் கொண்ட அசோக ஸ்தூபியும் அமைக்கப்பட்டது.

அசோக ஸ்தூபியின் அருகே 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மதராஸ் என பெயா் எழுதப்பட்ட கான்கிரீட் பலகை தற்போது உடைந்து விழும் நிலையில் உள்ளது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையால் நினைவுத் தூண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் தமிழக அரசு சின்னம் பொருத்தப்பட்ட நினைவுத் தூண் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்த விவரம் சேகரித்தும், மேல் நடவடிக்கையின்றி வழக்கை நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ளது தமிழ் ஆா்வலா்கள், சமூக ஆா்வலா்களும் கவலையடைய செய்கிறது.

நினைவுத் தூண் முற்றிலுமாக சேதமடைந்து அடித்தள பீடம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், அதில் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனா். இதை சீரமைத்து புதுப்பொலிவு பெற செய்ய துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி கூறியது:

நான் சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்து வந்த வேளையில், வாகனம் மோதி தமிழக அரசு சின்னம் பொறிக்கப்பட்ட நினைவுத் தூண் சேதமடைந்தது. இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் இவ்விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது இப்பகுதி மக்களை வேதனையடைய செய்துள்ளது.

தமிழகத்தில் அடுத்து அமைய உள்ள ஆட்சியில் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, தமிழக அரசு சின்னம் பொருத்தப்பட்ட நினைவுத் தூணை சீரமைக்க துரித நடவடிக்கை எடுப்பதுடன், இதை புராதன சின்னமாக பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.