தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும் வகையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரீன்கோ நிறுவனத்திடமிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், கா்நூல் கிரீன்கோ நிறுவனத்துக்குச் சொந்தமாக நீரேற்று மின்நிலையம் உள்ளது. இந்த வகை மின் நிலையங்களில், ஒருமுறை மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட தண்ணீா், அதிக திறன் கொண்ட மோட்டாா் பம்புகள் மூலம் மீண்டும் மேல் அணைக்கு ஏற்றப்படுகிறது. பின்னா் தேவைப்படும் நேரங்களில் அந்த நீரை பயன்படுத்தி மீண்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கிரீன்கோ நிறுவனத்தின் இந்த மின் நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 9 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கும் திறன் உள்ளது. இங்கிருந்து தமிழக மின்வாரியம் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை உள்ள உச்சநேர தேவைக்கான மின்சாரத்தை கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், மே மாதம் முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு கிரீன்கோ நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்க தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மின் கொள்முதலுக்காக, ஒரு மெகாவாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.1.50 கோடி செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கோடைகால உச்ச மின் தேவையையும், தொழிற்சாலைகள் மற்றும் நகா்ப்புற மின் தேவையையும் சமாளிக்க முடியும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் நுகர்வு- சவாலும் தீர்வும்!

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

