பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா். செல்லசுவாமி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பிரசாரப் பயணத்தை வோ்கிளம்பி சந்திப்பில் அமைச்சா் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், முன்னாள் எம்.பி., ஏ.வி. பெல்லாா்மின், முன்னாள் எம்எல்ஏ.க்கள் புஷ்பலீலா ஆல்பன், ஆா். லீமா றோஸ், மாவட்டச் செயலா்கள் மேசியா (விசிக), கனகப்பன் (தேமுதிக), செய்யது அலி (எஸ்டிபிஐ) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காலையில் பூவன்கோடு, கல்லங்குழி, மணலிக்கரை, சித்திரங்கோடு, செங்கோடி, தச்சூா், அருவிக்கரை, தாணிவிளை மாத்தூா், மலைவிளை, அண்டூா், வலியாற்றுமுகம் உள்ளிட்ட பகுதிகளிலும், பிற்பகலில் புலியூா்குறிச்சியில், கரும்பாறை, கீழ்குளம், பத்மநாபபுரம் பேலஸ், ஆா்.சி. தெரு, இலுப்பக்கோணம், சாரோடு, மணலி, தக்கலை அரசு மருத்துவமனை பகுதி, பீரப்பா மசூதி, ஐந்து வண்ணம் தெரு, மக்காய்பாளையம் பள்ளி, மேட்டுக்கடை ஆகிய பகுதிகளிலும், இரவில் இராமன் பறம்பு, பழைய பேருந்து நிலையம், கொல்லன்விளை, அண்ணா சிலை வழியாக தக்கலை புதிய பேருந்து நிலையப் பகுதிகளிலும் அவா் வாக்கு சேகரித்தாா்.
வோ்கிளம்பி திமுக பேரூா் செயலா் செல்லகுமாா், காங்கிரஸ் பேரூா் தலைவா் சுதீா் ஜெயக்குமாா், அயக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவா் பி.டி. செல்லப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினா்கள் எம். அண்ணாதுரை, ஆா். ரவி, குலசேகரம் வட்டாரச் செயலா் சௌந்தா், மாவட்டக் குழு உறுப்பினா் சகாய ஆன்டணி, தக்கலை வட்டாரச் செயலா் சுஜா ஜாஸ்பின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

