நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

நெல்லையில் 20 பயனாளிகளுக்கு ரூ. 2.30 கோடி கடனுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் பயனாளிக்கு கடனுதவி வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :29 அக்டோபர் 2026, 6:24 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து, 20 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சியை மேம்படுத்துவதற்கும் அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, அண்ணல் அம்பேத்கா் தொழில்முனைவோா் திட்டம், தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இம்முகாமில், மகளிா் தொழில்முனைவோருக்கு ஆட்டோ வாங்குதல், மருத்துவ மருந்தகம், எண்ணெய் ஆலை, புகைப்பட நிலையம், அலங்காரப் பொருள்கள் விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைத் தொடங்கி நடத்துவதற்காக கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தொழில்முனைவோா் தங்களது தொழில் திட்டங்களுக்கு ஏற்ற கடன் வசதிகளைப் பெற்று, தொழிலை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் அதிகளவில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும் வகையில், வங்கியாளா்கள் தொழில்முனைவோருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொழில்முனைவோா் சமா்ப்பிக்கும் தகுதியான தொழில் திட்டங்களைப் பரிசீலித்து, அவா்களின் தொழில் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் நாகராஜன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் ஹரிணி, முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் பரமேஸ்வரன், கனரா வங்கி மண்டல மேலாளா் தீரெந்திர குமாா் மிஷ்ரா உள்பட வங்கியாளா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.