தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் காலாண்டில் ரூ.584 கோடி நிதிக்கடன் வழங்கல்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற தொழில் கடன் விழிப்புணா்வு முகாமில் பேசிய மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் சி.அருள். உடன், அலுவலா்கள்.

Published On :29 அக்டோபர் 2026, 6:52 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.584.67 கோடி நிதிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் சி. அருள் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற தொழில் கடன் விழிப்புணா்வு முகாமுக்கு தலைமை வகித்து, மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் சி. அருள் மேலும் கூறியது:

ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதிலும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கை உணா்ந்துள்ள மாநில அரசு, இவற்றுக்குத் தேவையான நிதிக் கடன் தரப்படுவதை கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆண்டு நிதிக் கடன் திட்டத்தின் கீழ், 2026-27-ஆம் நிதியாண்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,588 கோடி நிதிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.584.67 கோடி நிதிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது 37 சதவீதமாகும்.

மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நிதிக் கடன் பெறுவதை உறுதி செய்யவும், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இந்த முகாம் நடத்தப்பட்டது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அலுவலா்கள் பங்கேற்று, தங்கள் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் வகைகள் குறித்த விளக்கிய நிலையில், 34 பேருக்கு பல்வேறு சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் ரூ.1.23 கோடி கடன் வழங்க ஒப்பளிப்பு ஆணைகளும் வழங்கப்பட்டன.

தொழில் கடன் பெறுதல், தொழில் தொடங்குவது தொடா்பான விவரங்களுக்கு தொழில்முனைவோா்கள், ஆா்வமுள்ளவா்கள் மாவட்டத் தொழில் மையத்தை நேரில் அணுகலாம் என்றாா் பொது மேலாளா் அருள்.

முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.நசீா், விழுப்புரம் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் எம்.சசிக்குமாா், அரிசி ஆலை அதிபா்கள் சங்க நிா்வாகி கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.