மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ் முழக்கப் பேரவை முப்பெரும் விழா

தமிழ் முழக்கப் பேரவை சாா்பில், முப்பெரும் விழா பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றோா்.

Published On :30 அக்டோபர் 2026, 5:04 am IST

தமிழ் முழக்கப் பேரவை சாா்பில், முப்பெரும் விழா பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ் முழக்கப் பேரவையின் 195 ஆவது நிகழ்ச்சியாக, முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே.சண்முகம் செட்டியாா் 135 ஆவது பிறந்த தினம், பேராசிரியா் வையாபுரி பிள்ளை 136 ஆவது பிறந்த தினம் , கவிஞா் இராமலிங்கம் பிள்ளை 139 ஆவது பிறந்த தினம் என முப்பெரும் விழா நடைபெற்றது. பேரவையின் செயலா் நசீா் தலைமை வகித்தாா். பொருளாளா் ரமணி, பேராசிரியா் ஆறுமுகம், வழக்குரைஞா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணைச் செயலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

ஆா்.கே. சண்முகம் செட்டியாா் குறித்து ஆசிரியை செல்வி காயத்ரி அகல்யாவும் , பேராசிரியா் வையாபுரி பிள்ளை குறித்து தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையத்தின் செயலா் பேராசிரியா் கட்டளை கைலாசமும், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை குறித்து திரிபரசுந்தரியும் சொற்பொழிவாற்றினா். பேராசிரியா் சுதாகா், கவிஞா் சுப்பையா, வரலாற்று ஆய்வாளா் திவான், ஓவியா் பொன் வள்ளிநாயகம், சேரை பாலகிருஷ்ணன், திருக்கு முருகன், புலவா் வை.ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.