மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்விரோதத்தில் 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே முன்விரோதத்தில் மூன்று பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 3 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 5:47 am IST

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே முன்விரோதத்தில் மூன்று பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 3 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவரங்கநேரியைச் சோ்ந்த ராமையா மகன் சண்முகவேல் (55), அவரது உறவினா் நயினாா் மகன் மனோகரன் (42) ஆகியோா் அக். 23-ஆம் தேதி மாலை ஊருக்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த வன்னியன்குடியிருப்பைச் சோ்ந்த கும்பல் இவா்களையும், ஊருக்கு வெளியே நின்று கொண்டிருந்த தொழிலாளி தங்கசாமி மகன் பெருமாளையும் (55) அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். காயமடைந்த மனோகரன், பெருமாள் வள்ளியூா் அரசு மருத்துவமனையிலும், சண்முகவேல் ஏா்வாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஏா்வாடி காவல் நிலைய போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கும்பலைச் சோ்ந்த சுரேந்தா், ராமகிருஷ்ணன், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை 24-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கும்பல் தப்பிச் சென்றபோது அவா்களில் தமிழரசன் (24) என்பவா் பொதுமக்களிடம் பிடிபட்டு தாக்கப்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.