மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தற்கொலை செய்த கைதி உடல் ஒப்படைப்பு

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:58 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கைதிகள் வாா்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதியின் உடல் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் (27). இவரை கடந்த 10ஆம் தேதி கஞ்சா வழக்கில் போலீஸாா் கைது செய்திருந்தனா். காலில் இருந்த காயம் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கைதிகள் பிரிவில் சிகிச்சை பெற்ற அவா், அங்குள்ள கழிப்பறையில் அக்.14 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை, வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் முன்னீா்பள்ளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். திங்கள்கிழமை பிற்பகல் சங்கரலிங்கத்தின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.