மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை

படம்: கோப்பிலிருந்து...

Published On :23 அக்டோபர் 2026, 5:11 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், வல்லம் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (37). இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், ராம்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், அம்பாசமுத்திரம் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா், வழக்கை திறம்பட புலன் விசாரணை செய்த அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா உள்ளிட்ட போலீஸாா், அரசுத் தரப்பு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.