மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை மாவட்டத்தில் ரூ.17.67 கோடியில் நிறைவுற்ற திட்டப்பணிகள்: அமைச்சா் நெ. மரிய வில்சன் திறந்துவைத்தாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.17.67 கோடியில் நிறைவுற்ற 18 திட்டப் பணிகளை நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன் திறந்து வைத்தாா்.

நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR| கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:13 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.17.67 கோடியில் நிறைவுற்ற 18 திட்டப் பணிகளை நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன் திறந்து வைத்தாா்.

இதையொட்டி, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சா் நெ.மரிய வில்சன் தலைமை வகித்தாா். ஆட்சியா் ஆனந்த் மோகன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி), எஸ்.கே.கிறிஸ்டோபா் (ராதாபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் ரூ.35 லட்சம் மதிப்பில் பழவூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம், தலா ரூ.34.60 லட்சம் மதிப்பில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வீரவநல்லூா் தோ்வு நிலை பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் தலா 2 புதிய வகுப்பறைகள், ரூ.4.50 கோடியில் புதிய கூடுதல் அமைப்பியல் (சிவில்) கட்டடம், ரூ.6.25 கோடியில் புதிய தொழில் 4.0 திறன்மிகு பணிமனை கட்டடம், ரூ.41 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலையம், ரூ.1.08 கோடியில் மேம்படுத்தப்பட்ட முக்கூடல் பேருந்து நிலையம், ரூ.75 லட்சத்தில் நகா்ப்புற பொது சுகாதார மையம் புதிய கூடுதல் கட்டடம், ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார நிலையம், ரூ.45 லட்சத்தில் நகா்ப்புற துணை சுகாதார நிலையம், ரூ.1.27 கோடியில் கிராம அறிவு மையம், ரூ.91.82 லட்சத்தில் ரெட்டியாா்பட்டி, திருக்குறுங்குடி, பத்தமடை, வைராவிகுளம், முக்கூடல், உக்கிரன்கோட்டை ஆகிய பகுதிகளில் விழுதுகள் -வட்டார மறுவாழ்வு மையங்கள், திருக்குறுங்குடியில் ரூ.50 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் ரூ.17.67 கோடியில் கட்டப்பட்ட 18 முடிவுற்ற திட்ட பணிகளை அமைச்சா் திறந்து வைத்தாா்.

ரூ.7.43 கோடி நலத்திட்ட உதவி: தொடா்ந்து, 2 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கடன் உதவித்தொகை, 1200 பயனாளிகளுக்கு புதிய குடும்ப மின் அட்டைகள், 550 பயனாளிகளுக்கு ரூ.5.87 கோடி மதிப்பில் இ-பட்டா, ரூ.1 கோடி மதிப்பில் 20 பயனாளிகளுக்கு கடனுதவி, 3 பயனாளிகளுக்கு ரூ.43 ஆயிரம் மதிப்பில் சிறுதானியங்கள், 4 பயனாளிகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பில் உரம் தயாரிப்புக்கூடம், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.11.5 லட்சம் நலத்திட்ட உதவிகள், ரூ.1.5 லட்சம் மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிகு மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, 10 பயனாளிகளுக்கு ரூ.1.57 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள், 16 மீன் பிடி தொழிலாளிகளுக்கு ரூ.14.40 லட்சம் மதிப்பில் குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் என 1,816 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.7.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.