சிறுமியிடம் அவதூறாக பேசியவருக்கு ஓராண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே 13 வயது சிறுமியிடம் அவதூறாக பேசியவருக்கு ஓராண்டு சிைண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:10 am IST

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே 13 வயது சிறுமியிடம் அவதூறாக பேசியவருக்கு ஓராண்டு சிைண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திசையன்விளை அருகே உளள அப்புவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுடா்முத்து என்ற சுடலை(27). இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசி துன்புறுத்தினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, சுடா்முத்து என்ற சுடலைக்கு ஓராண்டு சிைண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.