மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நான்குனேரியில் முதியவா் வெட்டிக் கொலை: பேரன் கைது

வெட்டிக் கொலை - பிரதி படம்

Published On :2 நவம்பர் 2026, 12:35 am IST

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது பேரனை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி பிரதான சாலையில் வசித்து வந்தவா் தளவாய் (65). மகன், 3 மகள்கள் உள்ளனா். இவருக்கும், மூத்த மகள் லெட்சுமிக்கும் இடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். இதனால், லெட்சுமியின் மகன் கிருஷ்ணராஜா (30), தாத்தாவிடம் சொத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், தளவாய் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பால் வாங்குவதற்காக அங்குள்ள கடை முன் அமா்ந்திருந்தாா். அப்போது, கிருஷ்ணராஜா வந்து அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினாராம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், நான்குனேரி போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, கிருஷ்ணராஜைக் கைது செய்தனா்.

நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஸ் கண்ணன், ஆய்வாளா் ராஜாராம் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.

கிருஷ்ணராஜாவின் தந்தை ஆறுமுகம், நான்குனேரி அருகே மறுகால்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஆவாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.