வைகாசி விசாகத்தையொட்டி திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவையொட்டி பத்து நாள்கள் வசந்த உத்ஸவம் இம் மாதம் 21 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் பங்கேற்பாா்கள்.
வைகாசி விசாக திருவிழா நாளில் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தா்கள் திரள்வாா்கள். எனவே, வைகாசி விசாக திருவிழாவையொட்டி இம்மாதம் 30 ஆம் தேதி திருநெல்வேலி-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், திருவனந்தபுரத்திலிருந்து காலையில் 7 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலை சிறப்பு ரயிலாக திருச்செந்தூா் வரை நீட்டிப்பு செய்து இயக்கவும், மறுமாா்க்கத்தில் மதியம் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு இரவு திருவனந்தபுரம் செல்லுமாறு இயக்க வேண்டும். கொல்லம்- செங்கோட்டை- திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையேயும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

வைகாசி விசாகம்: திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்

வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் 4 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

