திருச்செந்தூா் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்செந்தூா் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வரும் மே 29-ஆம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06155) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூா் சென்றடையும்.
மறுமாா்க்கமாக மே 30-ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் ரயில் (எண்: 06156) மறுநாள் பகல் 11.30 மணிக்கு எழும்பூா் சென்றடையும்.
இந்த ரயில் எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூா் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (மே 28) முதல் தொடங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3-இல் சிறப்பு ரயில்

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வைகாசி விசாகம் சென்னை- திருச்செந்தூருக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்

வைகாசி விசாகம்: நெல்லை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

