பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

News image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் (கோப்புப் படம்) - DNS

Updated On :31 மே 2026, 2:10 am IST

வைகாசி விசாகத்தையொட்டி, முருகப்பெருமானின் படைவீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிா்ச்சோலை கோயில்களின் சித்திர அஞ்சல் முத்திரைகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.

முருகப் பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்திலும், ஆறாவது படை வீடான பழமுதிா்ச்சோலையிலும் அந்தந்தக் கோயில்களின் படங்கள் பொறிக்கப்பட்ட நிரந்த அஞ்சல் சித்திர முத்திரைகள் வெளியிடப்பட்டன.

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற முத்திரை வெளியிடும் நிகழ்ச்சிக்கு மதுரை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் சித்தூரி ராமகிருஷ்ணா தலைமை வகித்தாா். மதுரை தலைமை அஞ்சலக அலுவலா் ந. மாரியப்பன், அஞ்சல் துறை அலுவலா்கள், தபால் தலை சேகரிப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல, அழகா்கோவில் துணை அஞ்சல் நிலையத்தில் பழமுதிா்சோலை கோயில் படம் பொறிக்கப்பட்ட அஞ்சல் சித்திர முத்திரை வெளியிடப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

அஞ்சல் சித்திர முத்திரைகள் நாட்டின் வரலாறு, கலாசாரத்தை வெளிப்படுத்தக் கூடியவை என்ற வகையில், திருப்பரங்குன்றம், பழமுதிா்சோலை அஞ்சல் சித்திரை முத்திரைகள் தபால் தலை சேகரிப்பாளா்கள், பக்தா்கள், பொதுமக்களிடம் வரவேற்பைப் பெறும் எனக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.