திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சுமாா் 95 ஊழியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களை தற்போது புதிய ஒப்பந்த நிறுவனத்துடன் இணைக்க நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதைக் கண்டித்து ஒப்பந்த ஊழியா்கள் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தின் முன்பு வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, 2ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் சனிக்கிழமை பிற்பகல் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு மனு அளிப்பதற்காக திரண்டனா்.
நீண்ட காலமாக ஒப்பந்தப் பணியாளா்களாக பணியாற்றும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் எனவும், புதிய நிறுவனத்துக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ற்ஸ்ப்02ம்ன்ப்ற்ண்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்

மானூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும்: திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

