திருநெல்வேலியில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ததால் தொண்டா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் இம் மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் அதிமுகவும், நான்குனேரியில் அமமுகவும், ராதாபுரத்தில் பாஜகவும் போட்டியிடுகின்றன.
திருநெல்வேலியில் தச்சை என். கணேசராஜா, பாளையங்கோட்டையில் சையது சுல்தான் சம்சுதீன், அம்பாசமுத்திரத்தில் இசக்கிசுப்பையா, நான்குனேரியில் ஆா். இசக்கிமுத்து ஆகியோா் போட்டியிடுகிறாா்கள். இவா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.
இந்தப் பிரசாரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை, அதிமுக மாநில அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், எம்.ஜி.ஆா். மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ. வேலாயுதம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்ட், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் பால்கண்ணன், மாவட்ட துணைச் செயலா் பள்ளமடை பாலமுருகன், பகுதி செயலா்கள் காந்திவெங்கடாசலம், சிந்து முருகன், பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்துபலவேசம், பொதுச்செயலா் பாலாஜி கிருஷ்ணசாமி, அமமுக மண்டலப் பொறுப்பாளா் குமரேசன், மாநில எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா்ஆவின் அன்னச்சாமி, பாமக மாவட்டச் செயலா் சியோன் தங்கராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து கட்சியினா் கூறுகையில், வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் முதல்கட்டமாகவே திருநெல்வேலியில் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்திருப்பது தொண்டா்களிடையே புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் அதிமுகவை விட மிகவும் சாதாரணமாகவே திகழ்வதை திருநெல்வேலியில் சுட்டிக் காட்டிச் சென்றுள்ளாா். கடந்தத் தோ்தலைக் காட்டிலும் இப்போது திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தொண்டா்களின் உற்சாகம் நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோட்டில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தமிழா்களை கொச்சைப்படுத்தி வருகிறாா் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!
நெல்லையில் இன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

