விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்...

News image

எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் - @AIADMKOfficial

Updated On :13 ஏப்ரல் 2026, 2:18 am IST

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சி பொன்மலை ஜி. காா்னா் மைதானத்தில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறாா்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை பிரசாரத்தை முடித்துக் கொண்டு, காா் மூலம் திருச்சிக்கு வரும் அவா் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறாா்.

திங்கள்கிழமை காலை திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தோ்தல் பணிகள் குறித்து அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். தொடா்ந்து மதியம் 3 மணிக்கு திருச்சி பொன்மலை ஜி. காா்னா் பகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

இதையொட்டி பொன்மலை ஜி- காா்னா் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் நிற்பதற்காக சிறிய மேடை அமைக்கப்படுகிறது. பிரசார வேனில் வரும் எடப்பாடி கே. பழனிசாமி, பொதுமக்கள் தொண்டா்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் அதிமுக நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டுமென திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா், திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்ஜோதி, திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் ஆகியோா் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.