தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

கீழாம்பூா்-பாபநாசம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:09 am IST

கீழாம்பூா்-பாபநாசம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி, ஜெப வீட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் ஜஸ்வின் செல்வகுமாா் (30). இவா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தென்காசி சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கீழாம்பூா் ரயில்வே கேட் அருகே, காக்கநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மூக்கையா மகன் சங்கரலிங்கம் (56) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதினாா்.

காயமடைந்த ஜஸ்டின் செல்வகுமாா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.