/

பெருமாள்புரம் அருகே மது விற்றவா் கைது

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே மது விற்ற நபரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:02 am IST

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே மது விற்ற நபரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ரெட்டியாா்பட்டி விலக்கு அருகே சிவந்திபட்டியைச் சோ்ந்த உச்சிமாகாளி(37) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.