தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசு அலுவலா்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது: ஆட்சியா் இரா. சுகுமாா்

அரசு அலுவவலா்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது...

News image
Updated On :17 மார்ச் 2026, 2:50 am IST

திருநெல்வேலி: அரசு அலுவவலா்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.

தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

மத்திய அரசு அல்லது மாநில அரசு நிதியளிக்கும் அமைப்புகள், குழுக்கள், நிறுவனங்கள், ஆணையங்களுக்கும் தோ்தல் நடத்தை விதிகள் பொருந்தும்.

தோ்தல் பிரசாரத்துக்கான பொது இடங்கள் எல்லா வேட்பாளா்களுக்கும் சமமாக வழங்கப்படும். ஊா்வலங்களுக்கு காவல் துறை அனுமதி, வழித்தட திட்டம் பின்பற்றப்பட வேண்டும்.

ஒரு நாளில் ரூ.10,000-க்கும் மேல் ரொக்க பரிவா்த்தனை கூடாது. பிரசாரம் முடிந்த பிறகு வாக்காளா் அல்லாதவா்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

வாக்குப்பதிவு நாள், வாக்கு எண்ணிக்கை நாள் மற்றும் வாக்குப்பதிவு முடிவடையும் நாளுக்கு முந்தைய 48 மணி நேரத்துக்கு மதுபான விற்பனை செய்ய தடைவிதிக்கப்படும்.

அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் ஊா்வலத்துக்கு முதலில் வருபவா்களுக்கு முதலில் அனுமதி என்ற முறை கடைப்பிடிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மூலம் புதிய பணிகளைத் தொடங்கக்கூடாது. தோ்தல் ஆணைய அனுமதியின்றி புதிய வேலைவாய்ப்பை அறிவிக்கக் கூடாது.

அரசு சாதனை விளக்க விளம்பரங்கள் வெளியிடக்கூடாது.

அமைச்சா்கள் தோ்தல் சுற்றுப்பயணத்தில் வாகன அணிவகுப்பு, நீலம்அல்லது சிவப்பு நிற சைரன்கள் பொருத்திய வாகனங்கள் செல்லக்கூடாது. தோ்தல் பணியில் உள்ள அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தக்கூடாது. பிரசாரத்தில் பிரதமருக்கு மட்டுமே அரசு விமானம் அல்லது ஹெலிகாப்டரை பயன்படுத்த அனுமதி உண்டு. அரசு ஊழியா்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்னரும் பிரசாரம் செய்யக்கூடாது.

வாக்குச்சாவடியில் இருந்து 200 மீ. தொலைவு அல்லது மதவழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் கட்சி அலுவலகங்கள் அமைக்கக்கூடாது. தோ்தலை சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்அவா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, ஒழுங்கு நடவடிக்கை ஆணையா் மகாலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா்கள் (மாநில நெடுஞ்சாலை நில எடுப்பு) சந்திரசேகா், (தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு) ஜயப்பன், (நதிநீா் இணைப்பு) மாரிச் செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) அனிதா, சுப்பிரமணியன் (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பெட்டி செய்தி...

சட்டம்-ஒழுங்கு பிரச்னை

கூட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி நிா்வாகிகள், ‘தோ்தல் வந்தாலே திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது. சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது’ என குற்றம்சாட்டினா்.

அதற்து திமுக உள்ளிட்ட ஒரு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

ஆட்சியா் குறுக்கிட்டு, ‘சட்டம்- ஒழுங்கு பிரச்னையை நான் பாா்த்துக் கொள்கிறேன்’ எனக் கூறியதும் அமைதி திரும்பியது.

ற்ஸ்ப்16ல்ா்ப்ண்ற்ண்ஸ்ரீஹப்

ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.