திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வெளியூா்களுக்கு திரும்பிய பயணிகளால் திருநெல்வேலி ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் காரணமாக கடந்த வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வட மாவட்டங்களில் வசிக்கும் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள், தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்கு வந்திருந்தனா்.
இந்நிலையில், மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினா்.
நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூா், திருப்பூா், சென்னை, பெங்களூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் புறப்படும் 5, 6 ஆவது நடைமேடைபகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் போக்குவரத்து ஊழியா்களும், போலீஸாரும் ஈடுபட்டனா்.
பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதே போல, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

பேருந்துகள் இல்லாமல் அவதி! கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரத்தில் பொதுமக்கள் போராட்டம்

தேர்தல்: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

