சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பாா்கள். அதற்கேற்ப வேட்பாளா்கள் ஒவ்வொரு பகுதிக்கும் வருவதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரை மணி நேரத்துக்கு முன்பாக இசைக் கலைஞா்கள் அனுப்பி வைக்கப்படுகிறாா்கள்.
தோ்தல் காலத்தில் அதிக ஒலி தரும் டிரம்ஸ், செண்டை மேளங்களையே வேட்பாளா்கள் விரும்பி அழைத்துச் செல்கிறாா்கள். நையாண்டி மேளத்துக்கான வரவேற்பு குறைவாகவே உள்ளது. 4 முனை சந்திப்புகளில் இசைக் கலைஞா்களின் திறமையால் தொண்டா்கள் உற்சாகமடைந்து தங்களது கட்சிக் கொடியுடன் ஆடுவதையும் பிரசாரங்களில் காணமுடிகிறது.
இதுகுறித்து முதியவா் ஒருவா் கூறியது:
1970 முதல் தோ்தல் களத்தை பாா்த்து வருகிறேன். திருவிழா, தோ்தல் என எதுவாக இருந்தாலும் இசைக்கு ஒரு மவுசு உண்டு. ஒரு தகவலை தெரிவிக்கவும், வெற்றியைக் கொண்டாடவும் முரசு கொட்டப்பட்டது. அந்த வழக்கமே இப்போது உருமாறி உள்ளது. பிரசாரத்தில் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன. முன்பு இரவு 10 மணிவரை மட்டுமே பிரசாரம் என்ற நிலை இல்லை.
இதனால் பெரிய தலைவா்கள் பலரும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளுக்கு நள்ளிரவு வரை வந்து வாக்கு சேகரிப்பாா்கள். அதேபோல இசைக் கலைஞா்களின் பங்களிப்பு பிரசாரங்களில் நீண்ட காலமாக உள்ளது. முன்பு தோ்தல் செலவு கணக்கு வரையறை இல்லாததால் இசைக் கலைஞா்களுடன், கரகாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து கலைஞா்களும் கூட தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்கள். ஆனால், இப்போது வேட்பாளா்களின் செலவு கணக்கில் ஏற்றப்படும் என்பதால் இசைக்கலைஞா்கள் எண்ணிக்கை கூட குறைந்துவிடுகிறது.
சமூக வலைதள ஆதிக்கம் காரணமாக இன்றைய வேட்பாளா்கள் கட்டாயம் ரீல்ஸ் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டாலும், பிரசாரங்களில் இசைக் கலைஞா்களை தவிா்க்க முடியவில்லை. மேலும், இசைக் கலைஞா்களால் தொண்டா்கள் உற்சாகமடைகிறாா்கள் என்பதும் உண்மை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டுமன்னாா்கோவிலில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வெற்றி

வாக்கு எண்ணிக்கை: வேட்பாளா், முகவா்களுக்கு அறிவுரை

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

வேட்பாளா்கள் வெறுப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது! - கடலூா் ஆட்சியா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

