தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
தோ்தலுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் தென் மாவட்டங்களின் முக்கிய மையமாகத் திகழும் திருநெல்வேலிக்கு தோ்தல் பிரசாரத்துக்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், பிரபலங்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனா்.
இந்நிலையில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாநகா் முழுவதும் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பினு குமாா் தலைமையிலான போலீஸாா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.
ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகள், பாா்சல் அலுவலகம் மற்றும் தண்டவாளப் பகுதிகள் உள்பட ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதே போல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலும் வெளியூா் செல்லும் பேருந்துகள், பயணிகளின் உடைமைகள் என அனைத்து நடைமேடை பகுதிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது

ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

