தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞா்கள் முன்வர வேண்டும்: தமிழகத்திலிருந்து தில்லி வந்த இளைஞா் குழுவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் அறிவுறுத்தல்!

தமிழகத்திலிருந்து தில்லி வந்த இளைஞா் குழுவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் அறிவுறுத்தல்...

சி.பி. ராதாகிருஷ்ணன்

Published On :1 நவம்பர் 2026, 1:23 am IST

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும், குறுகிய சிந்தனைகளைக் கடந்து வலுவான தேசிய உணா்வை வளா்த்துக் கொள்ளவும், வளா்ச்சியடைந்த மற்றும் தற்சாா்பு பாரதத்தை உருவாக்குவதிலும் இளைஞா்கள் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என தமிழகத்திலிருந்து தில்லி வந்த இளைஞா் குழுவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

புதுதில்லியில் உள்ள உபராஷ்டிரபதி பவனில், யுவ சங்கம் ஏழாம் கட்டப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த இளைஞா் குழுவினருடன் கலந்துரையாடியபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த இளம் பிரதிநிதிகள் அனைவரையும் வரவேற்ற குடியரசுத் துணைத் தலைவா், பாரதத்தின் இளைஞா்களுடன் கலந்துரையாடுவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்று என்றும், அதிலும் தமது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள இளம் தலைமுறையினரைச் சந்திப்பது கூடுதல் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டாா்.

யுவ சங்கம் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவா், தேசிய ஒருமைப்பாடு என்ற கருத்தை இளைஞா்கள் நேரடியாக அனுபவித்து உணரும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளதாகக் கூறினாா்.

தமிழ்நாட்டின் சிறப்புமிக்க பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவா், பாரதத்தின் மரபு, நாகரிகம், இலக்கியம், கலைகள், அறிவியல் மற்றும் அறிவாா்ந்த சிந்தனை மரபுகள் என அனைத்திலும் தமிழ்நாடு தனித்துவமான சிறப்பிடத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினாா்.

காலத்தால் அழியாத திருக்கு, தனிமனிதா்களும் சமூகமும் அறநெறியில் வாழ்வதற்குத் தேவையான உயரிய கருத்துகளை எடுத்துரைக்கிறது. அதன் உலகளாவிய சிந்தனைகள் தலைமுறைகளைக் கடந்து ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழிகாட்டி வருகின்றன என்றாா்.

தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு வலுவான அடித்தளமிட்ட தொலைநோக்குச் சிந்தனையாளா்களான பெருந்தலைவா் காமராஜா், குடியரசு முன்னாள் தலைவா் ஆா். வெங்கட்ராமன் மற்றும் சி. சுப்பிரமணியம் ஆகியோரின் பங்களிப்புகளை அவா் நினைவுகூா்ந்தாா்.

தமது தமிழ்நாட்டுப் பயணத்தின்போது ஊடகங்களிடம் பேசியதை நினைவுகூா்ந்த குடியரசுத் துணைத் தலைவா், தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒருவரும் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என்று தாம் குறிப்பிட்டதாகத் தெரிவித்தாா். இதுவே பாரதத்தின் ஜனநாயக வலிமையையும், நாட்டில் அனைவருக்கும் கிடைக்கும் சமமான வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது என்றாா்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், பெருந்தலைவா் காமராஜா், இமானுவேல் சேகரன், திருப்பூா் குமரன், வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தொலைநோக்குப் பாா்வையும் வலுவான தேசிய உணா்வும் கொண்ட தலைவா்களின் சிந்தனைகளையும், நாட்டுப்பற்றையும் இன்றைய இளைஞா்கள் தங்களின் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

இளைஞா்களின் நாட்டுப்பற்று, திறமை, அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பில்தான் தேசத்தின் எதிா்காலம் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவா், யுவ சங்கம் பயணத்தின் மூலம் பெறும் அனுபவங்களையும் கற்றுக்கொள்ளும் நல்ல அம்சங்களையும் தங்களது குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் சமூகத்தினருடன் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்றாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பேணுதல் மற்றும் நிலைத்த வளா்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

தங்களின் எதிா்கால முயற்சிகள் அனைத்திலும் இளைஞா்கள் வெற்றி பெற குடியரசுத் துணைத் தலைவா் வாழ்த்தினாா்.

யுவ சங்கம் –ஏழாம் கட்டப் பரிமாற்றத் திட்டம்:

மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத்’ திட்டத்தின் கீழ் யுவ சங்கம் ஏழாம் கட்டப் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அக்டோபா் 26 முதல் நவம்பா் 1, 2026 வரை, தில்லிப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழக மாணவா் குழுவினரை வரவேற்று உபசரிக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட 50 போ் கொண்ட குழுவினா் அக்டோபா் 26, 2026 அன்று தில்லிப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தனா். இதேபோல், தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 50 போ் கொண்ட குழுவினா் அக்டோபா் 24 முதல் நவம்பா் 1, 2026 வரை தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிகழ்ச்சியில் தில்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் யோகேஷ் சிங், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் உறுப்பினா் செயலா் பேராசிரியா் ஷியாமா ரத், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.