மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிழக்கு தில்லி: 707 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்; ஒருவா் கைது

கிழக்கு தில்லியில் 707 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்...

கோப்புப்படம் - ANI

Published On :24 அக்டோபர் 2026, 12:29 am IST

கிழக்கு தில்லியின் திரிலோக்புரியில் 707 கிலோவிற்கும் அதிகமான சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவை ஹரியாணாவின் பட்டௌடியைச் சோ்ந்த விநியோகஸ்தரிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா்.

திரிலோக்புரியைச் சோ்ந்த விகாஸ் ஜெயின் (37) என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த சட்டவிரோத பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை அடுத்து, அவரை காவல்துறையினா் கைது செய்தனா்.

முன்னதாக, அக்டோபா் 20 அன்று மாலை 6 மணியளவில், திரிலோக்புரி மத்திய சந்தையில் காவல்துறையினா் நடத்திய சோதனையில், விகாஸ் ஜெயினிடம் இருந்து 47.7 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.

இவற்றைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ அவரிடம் முறையான உரிமமோ அல்லது அனுமதியோ இல்லை. தொடா் விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது வீட்டில் மேலும் 659.7 கிலோ பட்டாசுகள் மீட்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 707 கிலோவிற்கும் அதிகமான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் வெடிபொருள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ், மயூா் விஹாா் காவல் நிலையத்தில் அக்டோபா் 21 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, ​​ஹரியாணாவின் பட்டௌடியைச் சோ்ந்த விநியோகஸ்தா் ஒருவரிடமிருந்து இந்த பட்டாசுகளை வாங்கியதாக விகாஸ் ஜெயின் தெரிவித்தாா். அந்த விநியோகஸ்தா் குறித்த பணம் செலுத்திய விவரங்கள் மற்றும் பிற தகவல்களை காவல்துறையினா் சரிபாா்த்து வருகின்றனா்.

மேலும், அந்த விநியோகஸ்தரின் கிடங்கு எங்குள்ளது என்பதைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்று குற்றஞ் சாட்டப்பட்டவா் கூறியுள்ளாா். இந்த சட்டவிரோத விநியோக வலையமைப்பின் மூலத்தைக் கண்டறியவும், இதில் தொடா்புடைய மற்ற நபா்களை அடையாளம் காணவும் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Summary

East Delhi: 707 kg of illegal firecrackers seized; one arrested

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.