கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிஜேபி போராட்டத்தில் நானும் எனது குடும்பத்தினரும் பங்கேற்போம்: அரவிந்த் கேஜரிவால்

அக்டோபா் 10 ஆம் தேதி ஜந்தா் மந்தரில் நடைபெறும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தில் நானும் எனது குடும்பத்தினரும் பங்கேற்போம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அரவிந்த் கேஜரிவால்

Published On :10 அக்டோபர் 2026, 1:29 am IST

நமது நிருபா்

அக்டோபா் 10 ஆம் தேதி ஜந்தா் மந்தரில் நடைபெறும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தில் நானும் எனது குடும்பத்தினரும் பங்கேற்போம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வாக்கு திருட்டு வழக்கில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ராஜினாமா செய்யக் கோரி தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் மக்கள் ஜனநாயகக் கட்சி போராட்டம் நடத்தியது. ‘ஜந்தா் மந்தரில் அதிகபட்ச எண்ணிக்கையில் கூடுமாறு அனைவரையும், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு நபா் அல்லது கட்சியைப் பற்றியது அல்ல; இது தேசத்தைப் பற்றியது, இந்த போராட்டம் சனிக்கிழமை ஜந்தா் மந்தரில் தொடங்குகிறது. நான் செல்வேன், எனது முழு குடும்பமும் செல்லும், நீங்கள் அனைவரும் செல்ல வேண்டும் ‘என்று செய்தியாளா்களிடம் கூறினாா் கேஜரிவால்.

மத்திய அரசு வாக்காளா் பட்டியலை சேதப்படுத்தியதாக கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா். பாஜகவுக்கு வாக்களிக்காதவா்கள் தங்கள் வாக்குகளை நீக்கியுள்ளனா், போலி வாக்குகள் சோ்க்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் ஞானேஷ் குமாரின் கீழ் வெளிப்படையாக நடந்தன. ஒட்டுமொத்த நாடும் அவரது ராஜினாமாவைக் கோருகிறது ‘என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.